search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்என் ரவி"

    • அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாக ஆளுநர் குற்றச்சாட்டு.
    • தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை.

    சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் இந்த உத்தரவு கடந்த 13-ம் தேதி தமிழ் நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் தனது அனுமதியின்றி தன்னிச்சையாக அரசிதழில் தேடுதல் குழு அமைக்கப்பட்டதாக ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார்.

    உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தனி தேடுதல் குழு அமைத்து இருக்கிறது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமிக்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் இல்லை. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழை திரும்ப பெற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி இருக்கிறார்.

    • தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தமிழக கவர்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர் என் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் கூறியிருப்பதாவது:-

    "கல்வி துறையில் உங்களின் தலைசிறந்த முயற்சிகள் மற்றும் அர்பணிப்புக்காக, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியை மாலதி, ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று தெரிவித்துள்ளார்.

    • கிரிவலம் மேற்கொள்ளும் ஆளுநர், நாளை காலை சாமி தரிசனம்
    • பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடுகிறார்

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருவண்ணாமலை செல்கிறார். திருவண்ணாமலை செல்லும் அவர் சாதுக்கள், ஆன்மிக குருக்களை சந்திக்க இருக்கிறார். பின்னர் இயற்கை விவசாயிகளுடன் உரையாடுகிறார்.

    தொடர்ந்து கிரிவலம் மேற்கொள்ளும் அவர், நாளை காலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பல்வேறு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடுகிறார். செஞ்சி கோட்டை உள்ளிட்ட இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் சென்னை திரும்புகிறார்.

    • 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்கமுடியாது.
    • ஆளுநருக்கு அதிக வேலை இருக்கும் என்று மக்கள் முன் மாயை உள்ளது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எண்ணித் துணிக என்ற திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழில் முனைவோர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி சென்னை கவர்னர் மாளிகையில் இன்று இளம் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளம் தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், தொழில் சார்ந்த துறைகளில் உள்ளவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:-

    130 கோடி மக்கள் உள்ள நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்கமுடியாது. நாடு வளர்ச்சி அடையவேண்டுமெனில் நாம் ஒவ்வொருவரும் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும்.

    கடந்த ஆட்சி காலத்தில் இருந்தவர்கள் நம்மை பின்னோக்கி அழைத்து சென்றனர். ஆளுநருக்கு அதிக வேலை இருக்கும் என்று மக்கள் முன் மாயை உள்ளது.

    ஆனால் எனக்கு அதிக வேலைகள் இல்லை. நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
    • கல்வியாண்டில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக 29-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கழைக் கழகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் அரங்கத்தில் நடைபெற்றது.

    பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.விழாவுக்கு தமிழக கவர்னரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கினார்.

    இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் முடித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 13,236 ஆண்களும், 30 ஆயிரத்து 625 பெண்கள் என மொத்தம் 43,861 பேர் பட்டம் பெற தகுதியான வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    இவர்களில் ஆராய்ச்சி படிப்பு முடித்த 948 பேர் மற்றும் பல்வேறு பாடங் களில் முதலாம் இடம் பிடித்து பதக்கம் பெறும் 105 நபர்கள் என 1053 நபர்க ளுக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கல்வியாண்டில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    விழாவில் கவர்னர் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். அந்த வகையில் திருச்செந்தூரில் உள்ள கோவிந்தம்மாள் கல்லூரி யில் இளங்கலை கணிதம் படித்த திவ்யா என்ற மாணவிக்கு தங்கப் பதக்கத்தை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

    ஆத்தூரை சேர்ந்த மாணவி திவ்யா தற்போது தற்போது ஆதித்தனார் கல்லூரியில் 2-ம் ஆண்டு முதுகலை கணிதம் படித்து வருகிறார். இவர் இளங்கலை கணித பாடப்பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். மாணவியின் தந்தை லட்சுமணன் என்பவர் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் கணக்கராக பணியாற்றி வருகிறார்.

    இதேபோல் கோவிந்தம்மாள் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிப்பில் மாணவி பாத்திமா சஹாரா தங்கப் பதக்கமும், அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் படிப்பில் மாணவி ஜெயரூபி தங்கப்பதக்கமும் கவர்னரிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டனர்.

    இதே போல் ஆதித்தனார் கல்லூரியை சேர்ந்த 5 பேர் டாக்டர் பட்டமும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் படித்த 3 பேரும் டாக்டர் பட்டம் பெற்றனர்.

    மேலும் காயல்பட்டினம் மகளிர் கல்லூரி மாணவி ஆங்கிலம் மற்றும் அரபிக் பாடங்களில் முதலிடம் பிடித்து 2 பதக்கங்களை பெற்றார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், நயினார் நாகேந்திரன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பல்கலைக் கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை வேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதா​ஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • அப்போது, ஆளுநர் நடுநிலையாகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட வேண்டும் என்றார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கர்நாடகாவில் நடப்பது அரசியல் கூட்டம், அதில் முதலமைச்சர் பங்கேற்கலாம்.

    கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் 10 கிலோ மீட்டருக்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

    ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும். ஆளுநர் நடுநிலையாகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
    • ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இதற்கிடையே, அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாருக்கு முறையான பதிலைத் தராமல் மழுப்பலான பதிலை ஆளுநர் அளித்துள்ளார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார். தான் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என தெரிவித்தார்.

    • சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது.

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    • பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை.
    • பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன.

    சென்னை:

    தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் கவர்னர் மாளிகையில் அனைத்து பல்லைக்கழக பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    இந்த கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

    பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை.

    பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன. நேர்மையான முறையில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடுதல் பொறுப்பு என்ற நிலையிலேயே இந்த பணியிடங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழக செயல்பாடுகள் முடங்கி உள்ளன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள் மீது ஆளுநர் அதிருப்தி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசுக்கும், கவர்னர் ஆர்.என். ரவிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
    • முதலீடுகளை ஈர்க்க சென்ற முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தையும் அவர் விமர்சித்து இருந்தார்.

    சென்னை:

    தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி பொறுப்பேற்றார். அப்போது அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "ராஜ் பவனிலோ அல்லது ஆளுநரிடமோ எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை" என்று கூறினார். பல்கலைக்கழகங்கள் தொடர்பான 8 மசோதாக்களுக்கும், சென்னைக்கு அருகில் ஒரு சித்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவுக்கும் ஒப்புதலை நிறுத்தி வைத்துள்ளேன்" என்று அவர் கூறியிருந்தார்.

    அதே நாளில், அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 17 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகக் கூறினார்.

    இந்நிலையில் அரசுக்கும், கவர்னர் ஆர்.என். ரவிக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் தி.மு.க. அரசின் திராவிடம் மாடல் கொள்கையை கவர்னர் ரவி கடுமையாக சாடி இருந்தார். அத்துடன் முதலீடுகளை ஈர்க்க சென்ற முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தையும் அவர் விமர்சித்து இருந்தார்.

    இந்நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உட்பட 13 மசோதாக்கள் கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை சட்ட மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன. பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மதம் அனுப்பிய 2 மசோதாக்கள் சேர்த்து 13 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என்பது தகவல் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.

    சட்டத்துறையின் பதிலின்படி, ஆளுநரிடம் "நிலுவையில் உள்ள" மற்ற மசோதாக்கள் தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டங்கள் (திருத்த மசோதா), சென்னைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, (கவர்னரால் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கப்படும்), டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் (இரண்டாம் திருத்தம்) ஆகியவற்றை நிர்வகிக்கும் சட்டங்களில் திருத்தம் தொடர்பான மசோதாக்கள்; மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, மற்றும் தனுவாஸ் (திருத்தம்) மசோதா, போன்றவை ஆகும்.

    இந்த மசோதாக்களில் பெரும்பாலானவை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதாகும். மேலும் 10 மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிதிச் செயலாளரை சிண்டிகேட் உறுப்பினராகச் சேர்ப்பது தொடர்பான ஒரு மசோதாவும் அடங்கும்.

    நில ஒருங்கிணைப்பு மசோதாவைத் தவிர, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களும் அடங்கும் என தமிழக சட்டத்துறை தெரிவித்துள்ளது.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதிலின்படி, கவர்னர் ரவி கடந்த ஆண்டு 48 மசோதாக்களுக்கும், இந்த ஆண்டு 21 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், 2022 சட்டமன்றத்தால் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் அதை முன்பே திருப்பி அனுப்பினார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
    • தமிழகத்தில் உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தக்கலையில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு இன்று மாலை நடக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே நீதி கிடைக்க வேண்டும். இருவரும் சமமாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண்கள் பயனடைந்து வந்தனர். தற்போது பா.ஜனதா அரசு அதற்கான நிதியை குறைத்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் 30 நாட்கள் மட்டுமே வேலை நடந்து வருகிறது. 4000 கோடி ரூபாய் சம்பள பாக்கி உள்ளது. ஆண்கள் சேமிக்கும் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சுந்தரகாண்டம், ராமாயணம், மகாபாரத்தை படித்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்று கூறியுள்ளார். இது வேடிக்கையாக உள்ளது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசன சட்டத்தை மாற்றி வருகிறார்கள்.

    சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை 15 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்க ஒன்று தான்.

    ஆனால் மேயர் மற்றும் பேரூராட்சி தலைவர்களாக பெண்கள் இருந்தாலும் அவர்களை முன்னிலையில் வைத்து விட்டு ஆண்கள் தான் அதை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளது. 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநில அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குழந்தைகள் திருமணத்தை தடுக்க 1986-ல் சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது சிதம்பரத்தில் தீட்சிகர் ஒருவர் குழந்தை திருமணம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. தானும் குழந்தை திருமணம் செய்து கொண்டதாக பகிரங்கமாக பேசியுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் ரவி எல்லை தாண்டி பேசி வருகிறார்.

    தமிழகத்தில் பா.ஜனதாவின் அஜெண்டாவை உருவாக்குபவராக கவர்னர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஆளுநர் ரவி ஆர்.எஸ். எஸ்.அமைப்பின் பிரகடனமாக செயல்படுகிறார்.

    பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பா.ஜனதா விமர்சித்து வருகிறது. இதன் மூலமாக அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள நடுக்கம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும்போது மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் கூட அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. ஆனால் அண்ணாமலையை தலைவராக்கினால் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.

    விலைவாசி உயர்ந்துள்ளது. அதற்கு அடிப்படை காரணம் பா.ஜனதா அரசின் பொருளாதார கொள்கை தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகும். மின் கட்டணத்தை தற்போது 25 சதவீதம் உயர்த்துவதாக கூறியுள்ளார்கள். மனிதர்களை இரவு நிம்மதியாக தூங்கவிடாமல் ஆப்பு வைக்கும் செயலில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

    தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு சட்ட திருத்தம் கொண்டு வந்ததும் பா.ஜனதா அரசு தான். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரை விசாரிக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூறவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளார். அவரை விசாரிக்க சில விதிமுறைகள் உள்ளது. அதை மீறி அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி அவரை விசாரித்து இருக்கலாம். அமலாக்கத் துறை மூலமாக எதிர்க்கட்சியினரை பா.ஜனதா மிரட்டி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வாசுகி, மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான்.
    • பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?

    சென்னை:

    தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் இன்று முதல் அடுத்தமாதம் 20- ந்தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

    இதையொட்டி இன்று காலை எழும்பூர் ம.தி.மு.க தலைமைக் கழகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார். ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, வஞ்சிய தேவன், ஜீவன், கழககுமார் பூங்கா ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:- தமிழ்நாட்டின் வரலாற்றில் சுதந்திர இந்தியா என்று நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டு கவர்னர்கள் யாரும் செய்யாத அட்டூழியம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.

    ஜூன் 14-ந் தேதி நடத்திய பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இன்று கையெழுத்து இயக்கம் நடத்த தொடங்கி உள்ளோம்.

    ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான். குடியரசு தலைவர் உரை இந்திய அரசு தயாரிக்கும் உரை தான்.

    ஆனால் பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?

    மார்க்சியம் காலாவதியானது என்று சொன்னார். அது பற்றி இவருக்கு என்ன தெரியும். அம்பேத்கர் சொன்ன கருத்துக்கு மாறாக பேச ஆரம்பித்தார். முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்த போது அவர் முயற்சியை முகத்திற்கு நேராக பேசுகிறார்.

    முதலமைச்சர் செயலை விமர்சிப்பதற்கு இவர் எதிர்கட்சி தலைவரா?

    கவர்னர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை தகுதி உள்ளது. ஆளுநர் பதவியே இருக்க கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்.

    தமிழக ஆளுநர் நீக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி. இவரை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். நாகாலாந்தில் இதே நாச வேலை செய்தார் அவர்கள் துரத்திவிட்டார்கள். கையெழுத்து எல்லோரிடமும் பெற வேண்டும் இது அரசியல் காரணத்திற்கு இல்லை. தமிழ் நாட்டின் நன்மைக்கு என்று சொல்லுங்கள். எங்கெங்கு கையெழுத்து வாங்க முடியுமோ அங்கு எல்லாம் கையெழுத்து வாங்குங்கள், வீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் வாங்குங்கள். இது வெற்றி பெரும் என்ற நம்பிக்கையோடு இதனை தொடங்குகிறோம். தி.மு.க. தோழமை கட்சிகள் இதனை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×